Sunday, 16 September 2012


பெளத்தம் (Buddhismபாளி/சமசுகிருதம்: बौद्ध धर्म புத்த தருமம்) என்பது கிமு566-486 இல் வாழ்ந்த புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒருசமயமும்தத்துவமுமாகும்இந்தியாவில் தோன்றிய இம்மதம் பின்னர் படிப்படியாக மத்திய ஆசியாஇலங்கைதிபெத்தென்கிழக்கு ஆசியாமற்றும் கிழக்காசிய நாடுகளாகிய சீனாவியட்நாம்ஜப்பான்கொரியா,மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் பரவியது. இதன் தாய் மதமான இந்து மதத்தின் பல கருத்துகளை எதிர்த்து அதிலிருந்து பிரிந்து வளர்ந்தது.
பௌத்தம் பெரும்பாலும், நற்செய்கைகளைச் செய்தல், கெட்ட செய்கைகளை விலக்குதல், மனப்பயிற்சி என்பவற்றை எடுத்துச் சொல்கிறது. இச் செயல்களின் நோக்கம், தனியொருவரினதோ அல்லது சகல உயிரினங்களினதுமோ கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து ஞானம் பெறுவதாகும். ஞானம் பெறுவதென்பது நிர்வாணம்அடைதலாகும்.

பொருளடக்கம்

  [மறை
உலகின் தோற்றம் பற்றிப் பல சமயங்களில் உறுதியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உலகைத் தோற்றுவித்த ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. பெளத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது, அதுவே பெளத்ததின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே. [1]சார்பிற்றோற்றக் கொள்கை
கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிருதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்றும் கூறுவர்.
இக்கொள்கையை சோ.ந.கந்தசாமி பின்வருமாறு விளக்குகின்றார்:
"எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும் ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை. ஆதலின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை, முதற் காரணத்தை உடன்பட்ட கடவுட் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தைக் கொண்டது."[2].
கடவுட் கோட்பாடு
Painting of Avalokitesvara in Tibetian style.
பெளத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பெளத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பெளத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான Anicca, Anatta, Dukkha மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும், அது பெளத்தத்தின் உலகப் பார்வைக்கு ஒவ்வாது.
அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களைக் கொண்ட ஒருமிய சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள் அல்லது அனுபவங்களைப் பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள், ஆனால் அவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுபட்டவர்களே.
புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்[3][4].

[தொகு]புத்தர் கண்ட நான்கு உண்மைகள்

  1. துன்பம் ("துக்கம்"): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
  2. ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
  3. துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
  4. எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.

[தொகு]எட்டு நெறிமுறைகள்

  1. நற்காட்சி - Right View
  2. நல்லெண்ணம் - Right Thought
  3. நன்மொழி - Right Speech
  4. நற்செய்கை - Right Conduct
  5. நல்வாழ்க்கை - Right Livelihood
  6. நன்முயற்சி - Right Effort
  7. நற்கடைப்பிடி - Right Mindfulness
  8. நற்தியானம் - Right Meditation

[தொகு]பிறவிச் சுழற்சியின் பன்னிரு சார்பு நிலைகள்

A Buddha Temple in Shanti Stupa Dhauli Giri
பிறவிச் சுழற்சியின் பன்னிரு சார்பு நிலைகள்
தமிழ்ஆங்கிலம்சமஸ்கிருதம்பாளிவிளக்கம்
அறியாமைIgnoranceஅவித்தைஅவிஜ்ஜா
செய்கைImpressionsசங்காரம்சம்ஸ்காரம்
உணர்வுConsciousnessவிஞ்ஞானக் கந்தம்விஞ்ஞானக் கந்தம்
அருவுருMind-Body Organismநாமரூபம்நாமரூபம்
ஆறு புலன்கள்Six Sensesஷட் ஆயத்தனம்ஷள் ஆயத்தனம்
ஊறுSense contactஸ்பர்சம்பஸ்ஸோ
நுகர்ச்சிSense Experienceவேதனாவேதனா
வேட்கைCravingதிருஷ்ணாதண்ஹ
பற்றுMental Clingingஉபாதானம்உபாதானம்
பவம்Will to bornபகவபகவ
பிறப்புRebirthஜாதிஜாதி
வினைப்பயன்Sufferingஜராமரணம்ஜராமரணம்

[தொகு]பெளத்த எண்ணக்கருக்கள்

A sparring form of Shaolinquan, an external style of Chinese martial arts, being demonstrated at Daxiangguo Monastery in KaifengHenan.
  • அகிம்சை
  • கர்மம்
  • சம்சாரம்
  • ஆத்மன்
  • தர்மம்
  • நிர்வாணம்
  • புத்தம்
  • மீள்பிறவி

[தொகு]தமிழில் பெளத்தம் நோக்கிய ஆக்கங்கள்

[தொகு]தற்கால உலகில் பௌத்தம்

பன்னாட்டு பௌத்தக் கொடி1880களில் இலங்கையில் ஹென்ரி ஸ்டீல் ஆல்காட்டால்வடிவமைக்கப்பட்டது. தற்காலத்தில்உலக பௌத்த கூட்டுணர்வால்பௌத்த அடையாளமாக பின்பற்றப்பட்டது.
பௌத்தர்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகள், பெளத்தர்கள் 230 மில்லியனுக்கும் 500 மில்லியனுக்கும் இடையில் இருப்பதாகக் காட்டுகின்றன. அதிகமாகக் குறிப்பிடப்படுவது ஏறத்தாழ 350 மில்லியன் ஆகும்.[5]
  • மகாயானமே சீனாஜப்பான்கொரியாவியட்நாம்சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொதுவாகப் பின்பற்றப்படும் பௌத்தமாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவுக்கு இடம்பெயர்ந்த சீனர் மகாயான பௌத்தத்தை மலேசியா, இந்தோனீசியா, புரூணி ஆகிய நாடுகளுக்குக் கொண்டுவந்தனர்.
  • தேரவாதமே மியன்மார்கம்போடியாலாவோஸ்தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசியாவின் பெரும் பகுதியிலும், இலங்கையிலும் முதன்மையாகக் பின்பற்றப் படுகின்றது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இதற்கு அங்கீகாரம் உண்டு.
  • வஜ்ரயானம் திபேத், மங்கோலியா ஆகியவற்றிலும், ரஷ்யா, சைபீரியா இந்தியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஐரோப்பாவில் அமைந்துள்ள கல்மிக்கியா, பண்பாட்டு அடிப்படையில் மங்கோலியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதால், அதன் பௌத்தம் மேல் நாட்டுப் பௌத்தத்தைவிட ஆசியப் பௌத்தத்துடனேயே சேர்த்துக் கணிக்கப்படுகிறது.

[தொகு]பெளத்தமும் அறிவியலும்

பிற சமயங்கள் போலன்று பெளத்தம் அறிவியலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை. ரிபற்ரன் தலாய் லாமாவின் பின்வரும் கூற்று இதை தெளிவுறுத்துகின்றது. "பொளத்ததில் மெய்ப்பொருள் புரிதலை நோக்கிய தேடல் சீரிய ஆராய்ச்சியனால் (critical investigation) மேற்கொள்ளப்படுகின்றது. அறிவியலின் முடிவானது பெளத்தத்தின் கூற்றுக்களில் ஏதாவதொன்றை பிழை என்று நிரூபிக்குமானால், அறிவியலை ஏற்று அந்தக் கூற்றை பெளத்ததில் இருந்து விலக்கிவிடவேண்டும்."[6]
ஆனால், தற்கால அறிவியலின் வழிமுறைகளுக்கு எல்லைகள் உண்டென்றும், மெய்ப்பொருளை அறிவதில் அறிவியலுக்கு உட்படாத வழிமுறைகளும் தேவை என்றும் பெளத்தம் கருதுகின்றது. அதாவது, சிலர் அனைத்தும் அறிவியலுக்கு உட்பட்டது என்கிறார்கள். இக்கருத்தைப் பெளத்தம் ஏற்கவில்லை, மேலும் இக்கருத்து அறிவியல் தன்மையற்றது என்பதையும் சுட்டுகின்றது. தலாய் லாமா இவ்விடயம் நோக்கிப் பின்வருமாறு கூறுகின்றார்:
There is a view where "psychology can be reduced to biology, biology to chemistry, and chemistry to physics. My concern here is not so much to argue against this reductionist position (although I myself do not share it) but to draw attention to a vitally important point: that these ideas do not constitue scientific knowledge; rather they represent a philosophical, in fact a metaphysical, position."
தலாய் லாமா - [7]

[தொகு]பெளத்தமும் தலித் மக்களும்

இந்து சமயச் சாதிய சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து விடுபடப் பெளத்தம் ஒரு மாற்று வழியாகத் தலித் மக்களின் முக்கிய தலைவர்களின் ஒருவரான அம்பேத்கரினால் பரிந்துரைக்கப்பட்டது. இப்பரிந்துரை அரசியல் சமூக காரணங்களுக்கான ஒரு மேலோட்டமான பரிந்துரை அல்ல. அம்பேத்கர் இளவயதில் இருந்தே பெளத்தத்தை ஆராய்ந்து, அதன் மீது நம்பிக்கை கொண்டு முன்மொழிந்த ஒரு பரிந்துரையே. தலித்துக்கள் மன ரீதியாகத் தம்மை விடுதலை செய்யச் சமய மாற்றம் அவசியம் என்பதை அம்பேத்கர் உணர்ந்து விளக்கினார். அவரின் வழிநடத்தலில் பலர் இந்து சமயத்தைத் துறந்து பெளத்தத்தை ஏற்றனர். இன்றும் அவ்வப்பொழுது பல தலித் சமூக மக்கள் தனியாகவோ, குழுவாகவோ பெளத்தத்தை ஏற்பது தொடர்கின்றது.










by ariyalur isha yoga center